-
லைசென்ஸ்கள் ரத்து: சட்டப் போராட்டத்திற்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்
 புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதை அடுத்து, இதை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன; சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனாலும், "இதனால் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காது' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், கடந்த 2008 ஜனவரியில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால், அரசுக்கு 1.76 லட்சம் ...


-
உ.பி.,யில் அப்படி என்ன தான் இருக்கிறது?-ஆர்.ரங்கராஜ் பாண்டே-
 உத்தர பிரதேசம், ஓர் அழகான மாநிலம். "ஆஸ்திரேலியாவின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குச் சென்றால், உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கம் என, அத்தனையும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும், ஓர் தனி உலகம் போல் இருக்கும்' என்றார், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட். அந்தளவுக்கு, "வெரைட்டி' கொண்டது உ.பி.,
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளது இந்த மாநிலம். சின்ன வயதில் நாம் படித்த இந்திய வரலாறு, அனேகமாக உத்தர பிரதேசத்தின் வரலாறாகத் தான் இருந்திருக்கிறது.இந்திய அரசு முத்திரையான, நான்கு ...


-
ஊழல் அதிகாரிகள்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடுவின் விளைவு என்ன?
 கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவினால், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் அதிகாரிகள், அமைச்சர்கள், ஊழியர்கள் மீதான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவெடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்திலும், கால வரம்பை கொண்டுவர வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
சாமியின் வழக்கு:"2 ஜி'., ஸ்பெக்டரம் விவகாரத்தின் தொடக்க கட்டத்தில், ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக்கூறி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா மீது, வழக்கு தொடர அனுமதி ...


-
தி.மு.க., இளைஞரணி தேர்வுக்கு பட்டை, நாமத்துடன் குவிந்த தொண்டர்கள்
 திருச்சி:திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. பகுத்தறிவு பாசறை என்று கூறிக்கொள்ளும், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்கள் அனைவரும் நெற்றியில் பட்டை, நாமம் அடித்துக்கொண்டும், விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டும் வந்திருந்தனர்.
வெள்ளை நிற சர்ட், பேன்ட் என, இளைஞரணி சீருடையில் வந்திருந்த அவர்களை பார்த்தபோது, ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்தனர். நேர்காணலில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவர்களிடம் நேர்காணல் தேர்வு ...


-
கோர்ட் வளாகத்தில் வீணாகும் அரசு பஸ்கள்!
 ஈரோடு: விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை, முற்றிலுமாக வீணாகி வருகின்றன.
நஷ்டத்தில் இயங்கிய போக்குவரத்து கழகத்தை, கைதூக்கிவிட எந்த ஒரு முயற்சியையும், கடந்த, தி.மு.க., அரசு எடுக்கவில்லை. மாறாக ஐந்தாண்டுகளில், ஆயிரக்கணக்கான புதிய பஸ்கள், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்கியதுடன், புதிய பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இதனால், தொழிலாளர்களிடம் பிடித்த செய்த இ.பி.எப், எல்.ஐ.ஸி., பிரிமியம், ஆயில் நிறுவனங்களுக்கான தொகை, பஸ்களுக்கு உதிரி பாகம் வாங்கிய தொகை ...


-
நான் கொச்சைப்படுத்தி பேசவில்லை: கருணாநிதி
 சென்னை :"காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களையும், சட்டசபையையும் கொச்சைப்படுத்தி பேசவில்லை; ஆளுங்கட்சியை பற்றி நான் எதுவும் கூறவில்லை,' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்:முதல்வர் ஜெயலலிதா உரையின் தொடக்கத்திலேயே, அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாத, ஒரு மூத்த எம்.எல்.ஏ., என்று என்னை மறைமுகமாக தாக்கியுள்ளார். "தோற்றது தி.மு.க., அல்ல. வாக்காளர்களாகிய நீங்கள் தான்,' என்று, காஞ்சிபுரம் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசியதைக் குறிப்பிட்டு, தமிழக வாக்காளர்களையும், சட்டசபையையும் ...


-
அலைக்கற்றை ஊழல் விஸ்வரூபம் : உயர் கமிட்டி மீது மாதவன் நாயர் பாய்ச்சல்
 புதுடில்லி: இஸ்ரோவின் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மாதவன் நாயர் உட்பட நான்கு மூத்த விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், "மத்திய அரசு உயர்மட்ட குழுவின் அறிக்கை நியாயமானதல்ல; கோழைத்தனமானது' என, மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) வர்த்தக அங்கமான ஆன்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கைக் கோள்களின் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை, தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது. இந்த ஒப்பந்தம், 2005ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி ...


-
பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல: பிரசார பிரியங்கா பேச்சு
 அமேதி:""பிரதமராவது ராகுலின் நோக்கம் அல்ல,'' என, பிரியங்கா கூறினார்.
உ.பி., சட்டசபை தேர்தலையொட்டி, அமேதி லோக்சபா தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் நடந்த பிரசார கூட்டங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பேசியதாவது:உ.பி.,யில் நடக்கும் சட்டசபை தேர்தல், இங்குள்ள வாக்காளர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். தலைவர்களை உருவாக்குபவர்களும் நீங்கள் (வாக்காளர்) தான். அரசாங்கத்தை ஏற்படுத்துபவர்களும் நீங்கள் தான். மக்களுக்கு சேவை செய்ய மனம் இல்லாமல், தங்கள் சுயநலத்தை மட்டுமே கொண்டு செயல்படும் தலைவர்களுக்கு, ...


-
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, அமைச்சரான கருப்பசாமி கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது மறைவிற்குப் பின், அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி, ஏப்ரல் 22ம் தேதிக்குள்ளாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் ...


|