Kovai City Portal

Coimbatore News Malai malar
மாலை மலர் | கோவை
கோவை - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2012

Maalaimalar.com
  • ரூ.10 கோடி மோசடி வழக்கு: ராவணன் ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸ் காவலில் இன்று விசாரணை
    கோவை சிறுமுகையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ரவிக்குமாரை மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கோவை கோர்ட்டில் அவர் சார்பில் வக்கீல் பவானி பாப்பா மோகன் மனுதாக்கல் செய்தார். நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் கடந்த 2-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை இன்று (6-ந் தேதிக்கு) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ராவணன் ஜாமீன் மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. ராவணன் சார்பில்

  • ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும்

  • வால்பாறையில் சிறுத்தை தாக்கி பலியான சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
    வால்பாறை முத்துமுடி எஸ்டேட் முதல் பிரிவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது மகன்களான கெலின் டொரினோ (வயது 7), ஜெரின் டொரினோ (5) ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது தேயிலை செடிகளுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி சிறுவன் ஜெரின் டொரினோவை தாக்கி கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமுடி எஸ்டேட் பொதுமக்கள் வால்பாறைக்கு திரண்டு வந்தனர்

  • 3 மாநிலங்களில் பல கோடி மோசடி செய்தவர் கைது: ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்
    பொள்ளாச்சி மகாத்மா காந்தி மண்டப வீதியை சேர்ந்தவர் மணிகண்டராஜ். இவர் பழனி, பொள்ளாச்சியில் கல் குவாரி நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமாக பொள்ளாச்சியில் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த காம்ப்ளக்ஸை விற்பனை செய்ய முயன்றார். இதனை அறிந்த ஈரோடு பழைய பாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீதரன் என்கிற தேனி ஸ்ரீதர் என்கிற ரவிக்குமார் பொள்ளாச்சி வந்தார். அவர் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மணிகண்டராஜை அணுகினார்

  • போலி தங்கத்தை கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் மோசடி: டிப்- டாப் பெண் கைவரிசை
    கோவையில் தனியார் நிதிநிறுவனம் உள்ளது. இதன் கிளைகள் பீளமேடு, உக்கடம் உள்பட 7 இடங்களில் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் செப்டம்பர் மாதம் 11 -ந்தேதி முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற்ற கணக்கின் போது ரூ. 15 லட்சம் வரை மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்தது. போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் நிநிநிறுவன மேலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரித்த போது இந்த மோசடியில் ஈடுபட்டது ஒரு இளம் பெண் என்பது தெரிய வந்தது. அந்த பெண் தனது பெயரை பிரியா, ஷீபா,

  • சிறுத்தை தாக்கி மாணவன் சாவு- எஸ்டேட் மக்கள் விடிய விடிய சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்
    வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வன விலங்குகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகள் வீடுகள், சத்துணவு கூடங்கள், பள்ளிகளை இடித்து சேதப் படுத்துகின்றன. புதருக்குள் பதுங்கியிருக்கும்

  • கோவை பஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவன் முத்துப்பாண்டி (வயது 21). கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தான். வழக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான். போலீசார் அவனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் முத்துப்பாண்டி சிக்கவில்லை. தலைமறைவாக வாழ்ந்து வந்த முத்துப்பாண்டி மீண்டும் தனது சுய ரூபத்தை

  • சட்டசபையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. விவாதம்: ஜெயலலிதா பேச்சுக்கு அன்புமணி ஆதரவு
    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது. அதில் பங்கேற்கவே வந்துள்ளேன். புதிய அரசியல், புதிய மாற்றங்கள் என்ற கொள்கையோடு கட்சியை வளர்க்கும்

  • கோவையில் நண்பன் பட வெற்றி: ரசிகர் அனைவரும் எனது நண்பர்கள்- நடிகர் விஜய் ருசிகர பேச்சு
    கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று கோவை வந்தார். நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். அங்கு

  • சத்துணவு பெண் ஊழியர் கொலை: கணவரை கடத்திய 4 பேர் கைது
    கோவை - திருச்சி சாலையில் பொங்கலூர் அருகே உள்ள நாச்சிப்பாளையம் காட்டில் 35 வயது மதிக்கதக்க பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. இது குறித்து அவினாசிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது. அவர் தாயம்பாளையத்தை சேர்ந்த

Latest News